உயர்நீதிமன்ற எச்சரிக்கையையடுத்து பொறியியல் விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலை மூலமாக செலுத்த, அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டு ள்ளது.
பொறியியல் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறைக் கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கட்டண த்தை வரைவேலையாக செலுத்த அனுமதிக்குமாறு பரிந்துரை செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உறுதிமொழிப்பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள தாகவும், மாணவர்கள் எந்தப்புகாரும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இன்னும் காலஅவகாசம் இருக்கும் போது புகாரே வரவில்லை என்று எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பி னர். நீதிமன்றம் கூறிய யோசனைகளை பின்பற்றக்கூடாது என்ற முடிவில் உறுதி யாக இருக்கிறீர்களா என்று கடுமையாகச் சாடினர். என்ன செய்வீர்களோ தெரி யாது கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று எச்சரித்த நீதிபதிகள், மாணவர்களின் விண்ணப்பக் கட்டணத்தை அண்ணா பல்கலைக் கழகமே வங்கிகளில் செலுத்த முடியுமா என்பதை ஆராய வேண்டும் என்று கூறியுள்ளனர். நீதிபதிகளின் எச்சரிக்கைக்குப் பணிந்த அண்ணா பல்கலை க்கழகம், வரைவோலை மூலமாக கட்டணத்தை செலுத்த வசதியாக 18 ஆம் தேதிக்குள் இணைய தள மென்பொருள் மாற்றி அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment