பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிணை வழங்க திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை, தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த வழ க்கை விசாரித்து வரும் மாநில குற்றப்புலனாய்வுத்துறை, நிர்மலாதேவியை நேற்று நீதிமன்றத்தில் நேர்நிறுத்தியது. நீதிமன்றக் காவல் 23 ஆம் தேதிவரை நீட்டிக்கப் பட்டதையடுத்து மீண்டும் மதுரை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலை யில், பிணையில் விடுவிக்கக்கோரி பேராசிரியை நிர்மலாதேவி திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பு வழக்குரைஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனை யடுத்து பேராசிரியை நிர்மலாதேவியின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே ஆய்வுப்பணிக்காக திருவில்லிபுத்தூர் வந்த ஆளுநருக்கு எதிர்க்கட் சிகள் கறுப்புகொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் ஆண்டாள் கோவிலில் வழிபாடு நடத்தினார். அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment