தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கொள்கை பிடிப்புடன் மக்கள் வீரராக பணி யாற்றிய ஜெ.குருவின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜெ.குரு சிறந்த செயல்வீரர், வேகமான பேச்சாளர், அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடிய இனிய பண்பாளர் என குறிப்பிட்டுள்ளார். ஜெ.குருவின் மறைவு அப் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள இரங்கல் செய்தி யில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் கடுமையாக போராடியவர் ஜெ.குரு என்று தெரிவித்துள்ளார்.
ஜெ.குருவின் இழப்பு பா.ம.க.வுக் கும், வன்னியர் சமுதாயத்துக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஜெ.குருவை இழந்து வாடும் குடும்பத்தார், மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோ ருக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள் ளார்.
இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஜெ.குரு, அவரது வட்டாரத் தில் தனிச் செல்வாக்குடன் திகழ்ந்தவர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி தெரிவித்துள்ளார்.
யாதவ மகாசபை மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னே ற்ற கழகத் தலைவர் தேவநாதன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், வன்னியர் சங்கத் தலைவர் என்பதையும் தாண்டி தங்கள் சமுதாயத்தின் மீதும் அதீத பாசம் கொண்டு தங்களின் போராட்டங்களுக்கு தோள்கொடுத்த தோழன் ஜெ.குரு மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
இதேபோல ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத், அக்கட்சியின் தமிழகத் தலைவர் கவுரி சங்கர், நடிகர் ராதாரவி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சித் தலைவர் புகழேந்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவனர் ஆறு.சரவணன் உள்பட பல்வேறு தலைவர்களும் ஜெ.குரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment