வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மறைவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். - Agnipuratchi

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மறைவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Share This


பாட்டாளி மக்கள் கட்சியின் தூணாக விளங்கிய காடுவெட்டி ஜெ.குரு உடல் நலக்குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தரும்புரியில் அஞ்சலி செலுத்திய பா.ம.க வினர், ஜெ.குரு மறைவால் மீளாத்துயரில் இருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். மதுராந் தகத்தில் ஒன்று திரண்ட பா.ம.க -வினர் ஜெ.குரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மெழுவர்த்தி ஏந்தியும் வீர வணக்கம் செலுத்தினர்.  

வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம், தெள்ளாறு உள்ளிட்ட பகுதிகளிலும் ஜெ. குரு மறைவுக்கு பா.ம.க -வினர் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். திண்டிவனத்தில் பா.ம.க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு மாநில துணைத்தலைவர் ஏழுமலை தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பன்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடியில் வன்னியர் சங்க இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜெ.குரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் முன்னாள் நகரமன்றத் தலைவர் சம்பத்குமார் தலைமையில் பா.ம.க- வினர் முக்கிய வீதிகள் வழியாக ஜெ.குரு உருவப்படத்தை ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினர். மங்களாபுரத்தில் மாநில துணைப்  பொதுச் செயலாளர் பொன்னுசாமி தலைமையில் ஜெ.குரு மறைவுக்கு அஞ்சலி செலுத்த ப்பட்டது. இதேபோல், காளிப்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் பா.ம.க -வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில்  பா.ம.க மாநில துணைப்பொதுச் செயலாளர் வேலாயுதம் தலைமையில் ஜெ.குரு பதாகை ஏந்தி நூற்றுக்கணக்கானோர் அமைதி ஊர்வலம் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages