தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர் இன்று தூத்துக்குடியில் விசாரணை நடத்துகின்றனர். - Agnipuratchi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர் இன்று தூத்துக்குடியில் விசாரணை நடத்துகின்றனர்.

Share This

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிமன்றத்தில் மட்டுமின்றி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரிப்பதற்காக தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 அதிகாரிகள் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து நேரடியாக கள ஆய்வு நடத்த உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்தை பார்வையிடும் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர்.  துப்பாக்கிச்சூடு குறித்து மாநில குற்றப்புலனாய்வுத்துறையினர் ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages