வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு குணமடைய வேண்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பா.ம.க. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவரு மான ஜெ.குரு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி திருவிடைமருதூர் கிழக்கு ஒன்றிய பா.ம.க. சார்பில், கும்பகோணத்தை அடுத்த பழியங்கநல்லூரில் உள்ள அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறறது. வெங்கட்ராமன், ரவிச்சந்திரன், ஜோதிராஜ், தியாக பக்கிரிசாமி, சிவக்குமார், கும ரேசன், பாலகுரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உத்தண்டி பிடாரி யம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோடை வெப்பத்தில் தவிக்கும் மக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. முதல் நாளான இன்று குடிநீர், மோர், குளிர்பானம், தர்பூசணி, நுங்கு, இளநீர் உள்ளிட்ட வற்றை, பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினர். இளைஞர் அணிச் செயலா ளர் ராஜேஸ்வரி பிரியா மற்றும் ராம் குமார், மோகன சுந்தரம், லட்சுமணன், ஜானகி ராமன் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment