திண்டிவனம் - ஏ.கே.மூர்த்தி நிகழ்ச்சி - Agnipuratchi

திண்டிவனம் - ஏ.கே.மூர்த்தி நிகழ்ச்சி

Share This

விழுப்புரம் மாவட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன் கோவில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

செஞ்சி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன் கோவிலில் 18வது ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மச்சார் அம்மனை தேரில் வைத்து பல்வேறு பூசைகள் நடத்தப்பட்டன. பின்னர் முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.


மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேரை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரண்டு வடம்பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி கீழ்மாம்பட்டு கிராமத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages