*தூத்துக்குடியில் போராட்டத்தைக் கலைக்கச் சென்ற காவல்துறையினர், போராட்டக்காரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளன.
*
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட் டனர். அவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்றதால் வன்முறை வெடித் தது. ஆட்சியர் அலுவலகத்தின் சன்னல் கண்ணாடிகளை உடைத்த போராட்டக் காரர்கள், பொருட்களை சூறையாடினர். கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது. பல இடங்களில் பொது மக்களை காவல்துறையினரும், காவல்துறையினரை பொதுமக்களும் மாறி மாறி விரட்டியடித்துக் கொண்டிருந்ததால் பதற்றம் அதிகரித்தது.
பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை, கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மட்டும் 9 பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி உயிரிழந்தனர். ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் ஒருவரும் உயிரிழந்தார். கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய காவல்துறை, சாதாரண உடைகளில் குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து சுட்டுத்தள்ளியதற்கான ஒளிப்படக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு முழக்கமிட்ட 17 வயது பள்ளி மாணவி வெனிஸ்டாவைச் சுட்டுத்தள்ளினர். வாயில் பாய்ந்த குண்டு கழுத்து வழியாக வெளியேறியதால் ரத்த வெள்ளத்தில் மிதந்த வெனிஸ்டா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள வெனிஸ்டா, இன்று வெளியிடப்படும் தேர்வு முடிவை அறியாமலேயே இறந்து போனது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளன. பேருந்துப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.
No comments:
Post a Comment