தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் விதிமீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு மாநில குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப் படைக்கப்பட்டது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை இன்று தொடங்கியது. துணை காவல் கண்காணிப்பா ளர் பிரவீன்குமார் மேற்பார்வையில் 20 காவல் ஆய்வாளர்களைக் கொண்ட குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது. தென்பாகம், வடபாகம், சிப்காட் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் தொடர்பான கோப்புகளைப் பெற்று விசா ரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நேரடி ஆய் வும் நடத்தப்படுகிறது. இதனிடையே தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவிட்ட தால் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மேலும் 2 வழக்கை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். தென்பாகம் காவல் சரகத்தில் தாக்குதல் நடத் தியதாக 4 ஆயிரம் பேர் மீதும், அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி பகுதியில் தாக் குதல் நடத்தியதாக ஆயிரம் பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போரா ட்டக்காரர்களுக்கு எதிராக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டது தொடர்பாக ஏற்கனவே இரண்டு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment