ஸ்டெர்லைட் ஆலை மூடி முத்திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு கேவியட் எனப்படும் முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்துள்ளது. - Agnipuratchi

ஸ்டெர்லைட் ஆலை மூடி முத்திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு கேவியட் எனப்படும் முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்துள்ளது.

Share This

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஆணையின்பேரில் ஸ்டெர் லைட் ஆலை மூடி முத்திரையிடப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ராக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சட்டரீதியாக எளிதில் முறியடிக்க முடியும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலை மூடி முத்திரையிடப்பட்டதற்கு எதிராக யாராவது வழக்குத் தொடர்ந்தால், தமிழக அரசின் கருத்தை அறியாமல் ஆணை எதுவும் பிறப்பிக்கக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவை யில் இன்று ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விளக்கமளித்தனர். அப்போது ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து தாங்கள் ஏற்கெனவே தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்றனர். தி.மு.க. உறுப்பினர்கள் பேரவை யில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்பதால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் அவைக்கு வரலாம் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages