ஜெ.குருவின் மறைவிற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தூண்களில் ஒருவரும், எளிய மக்களுக்காக இறுதிவரை போராடியவருமான பா.ம.க முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.குரு, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தியைக் கேட்டு துயரமுற்றதாக குறிப்பிட்டுள்ளார். பாட்டாளிகளின் குரலாக திகழ்ந்த, குருவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபமும், ஆறுதலும் கூறியுள்ளார்.
பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெ.குருவின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், பாமகவினர் மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்களின் துயரில் பங்கு கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஜெ.குருவின் ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திப்பதாவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment