சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தால் வணிகர்கள் பாதிக்கப்படுவதைஎதிர்த்துபா.ம.க. தொடர்ந்து போராடும் என மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
35வது வணிகர் நாளையொட்டி இந்தியவணிகர் உரிமை மீட்பு மாநாடு சென்னையைை வேலப்பன்சாவடியில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ்தலைவர் திருநாவுக்கரசர் உட்படபல்வேறு கட்சிகளிின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் உறையாற்றிய மருத்துவர் இராமதாஸ், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால் சிறு,குறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்புக்கான வணிக இலக்கை ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாயாக உயர்த்தவேண்டும் என்றும் அவர் கூறினார்.
வணிகர்களிடம் கெடுபிடி காட்டுவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்என்றும் மருத்துவர் இராமதாசு கேட்டுக்கொண்டார். சில்லறைவணிகத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட்போன்ற பெருநிறுவனங்கள் நுழைவதை எதிர்த்தும் பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை எதிர்த்தும்வணிகர்கள் நடத்திய போராட் டத்துக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற போராட்டங்களுக்கு பா.ம.க. எப்போதும் துணை நிற்கும். என்றும் மருத்துவர் இராமதாசு உறதியளித்தார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்ஜவாஹிருல்லா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லிம்லிக்தலைவர் அபுபக்கர், பா.ம.க. தலைவர்ஜி.கே.மணி உள்பட பல்வேறு கட்சித்தலைவர்களும், இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment