கொடைக்கானலில் நடைபெற்ற ஹாக்கிப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மூஞ்சிக்கல் அரசு விளையாட்டு திடலில் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், காந்திகிராமம், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முதலிடம் பிடித்தன. இதையடுத்து அங்குள்ள நட்சத்திர ஏரியில் அலங்கார படகு போட்டி நடைபெற்றது. பல விதமான அலங்காரங்கள் செய்யப்பட்ட படங்குகள் ஏரியில் அணிவகுத்தன.
No comments:
Post a Comment