வடகொரியா அதிபர் உடனான சந்திப்பை ரத்து செய்வதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-ஐ வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி அணு ஆயுதங்கள் அழிப்பு தொடர்பாக வடகொரியாவுக்கு அமெரிக்கா நிபந்தனைகள் விதித்தது. இதைத் தொடர்ந்து அணு ஆயுத ஆய்வுக்கூடங்களை அழித்து வந்த அதிபர் கிம், சில நிபந்தனைகளில் முரண்பட்டார். இதற்கிடையில் தென் கொரியா வுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் தென்கொரியாவுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்த வடகொரியா, அணு ஆயுத ஒழிப்பில் தங்களை கட்டாயப்படுத்தினால், அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பில் இருந்தும் விலக நேரிடும் என எச்சரித்தது.
இதனால் கோபம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், சிங்கப்பூரில் நடைபெற இருந்த சந்திப்பை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக வடகொரிய அதிபருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். வடகொரியா தனது அணு ஆயுதங்களின் திறன் களை பற்றி பேசியதாகவும், ஆனால் அவற்றை விட சக்தி வாய்ந்த தங்களுடைய ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருக்க கடவுளை வேண்டிக் கொள்வதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment