நிஃபா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலையொட்டி கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 12ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. - Agnipuratchi

நிஃபா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலையொட்டி கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 12ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share This

கடந்த சில நாட்களாக கேரளாவை அச்சுறுத்தி வரும் நிஃபா வைரஸ் காய்ச்சலு க்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணி க்கப்படுகின்றனர். நோயின் தாக்கம் அதிகரிப்பதால் மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா மற்றும் நலவாழ்வுத் துறை கூடுதல் தலைமை செயலர் சதாநந்தன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்க ளில் வரும் 12ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நடுவண் பணியாளர் தேர்வாணைய தேர்வைத் தவிர, மாநில பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உட்பட பிற தேர்வுகளை தள்ளி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இதனிடையே, நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக-கேரள எல்லையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக நலவாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய தமிழகத்தில் ஆய்வகம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages