அரசியல் பற்றிய அறிவை இளம் பருவத்திலேயே மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என பசுமை தாயகம் அமைப்புத் தலைவர் சவுமியா  அன்புமணி தெரிவித்துள்ளார். - Agnipuratchi

அரசியல் பற்றிய அறிவை இளம் பருவத்திலேயே மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என பசுமை தாயகம் அமைப்புத் தலைவர் சவுமியா  அன்புமணி தெரிவித்துள்ளார்.

Share This

பெண் சாதனையாளர் விருது’ வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், பசுமைத் தாயகம் அமைப்புத் தலைவர் சவுமியா அன்புமணிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய சவுமியா அன்புமணி,   இளம் பருவத்திலேயே அரசியல் பற்றிய அறிவை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றார். 

பெண்கள் பாதுகாப்பு, கல்வி, நலவாழ்வு, கிராமிய பெண்களுக்கு அதிகாரமளித்தல், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு,   மது மற்றும் புகையிலைக்கு எதிராக ஜக்கிய நாடுகள் அவையில் குரல் கொடுத்தற்காக சவுமியா அன்புமணிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர்,  மென்மேலும் சாதனைபுரியவே  இதுபோன்ற விருதுகள் வழங்கப்படுவதாகக் கூறினார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மு. கிருஷ்ணசாமி, அடையாறு புற்றுநோய் மருத்துவனை மருத்துவர் சாந்தா, பன்னாட்டு அரிமா சங்கத் தலைவர் நரேஷ் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages