தகுதிநீக்கம் செயல்பட்ட 18 எம். எல். ஏ. கள் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி 17 எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்துள்ளனர். தங்க.தமிழிச்செல்வன் தவிர மற்ற 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தினால் உரிய நீதி கிடைக்காது என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பளித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்பு கொடுத்தனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது சரியல்ல என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பு கூறினார்.
மாறுப்பட்ட தீர்ப்பால் வழக்கு விசாரணையை 3-வது நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார். ஆனால் இதுவரை தகுதி நீக்க வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி 17 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment