இந்திய பயனாளர்களின் தகவல் திருட்டு குறித்து வரும் 20ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க முகநூல் நிறுவனத்தை நடுவணரசு அறிவுறுத்தியுள்ளது.  - Agnipuratchi

இந்திய பயனாளர்களின் தகவல் திருட்டு குறித்து வரும் 20ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க முகநூல் நிறுவனத்தை நடுவணரசு அறிவுறுத்தியுள்ளது. 

Share This

பன்னாட்டு தேர்தல் பரப்புரை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவுக்கு, தனது பயனாளர்களின் தகவல்களை முகநூல் நிறுவனம் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த விசாரணையில் ஒட்டுமொத்தமாக 5 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டதாக முகநூல் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் ஒப்புக்கொண்டார். இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களும் அடங்கியுள்ளதால், நடுவணரசு கடும் அதிருப்தி அடைந்தது. இதனால் ஜூன் 20ஆம் தேதிக்குள் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு ஏற்கனவே நடுவண் மின்ணனு மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்பில் அறிவிக்கை அனுப்பப்பட்டது. இதனை மீண்டும் அறிவுறுத்தியுள்ள நடுவணரசு, இத்தகைய சட்டமீறல்களை தடுப்பதில் ஆழ்ந்த கவனம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages