பள்ளிகளில் கல்விக்கட்டணங்கள் தன்னிச்சையாக உயர்த்தப்படுவதை தடுக்க நடுவணரசு திட்டம் ஒன்றை வகுக்க முடிவுசெய்துள்ளது. - Agnipuratchi

பள்ளிகளில் கல்விக்கட்டணங்கள் தன்னிச்சையாக உயர்த்தப்படுவதை தடுக்க நடுவணரசு திட்டம் ஒன்றை வகுக்க முடிவுசெய்துள்ளது.

Share This

தனியார் பள்ளிகள் அரசு நிர்ணையிக்கும் கட்டணங்களை விட கூடுதலாக வசூலிப்பதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பள்ளிகள் தன்னிச்சையாக கட்டணங்களை நியமித்துக்கொள்வதால் இத்தகைய குற்றச் சாட்டுகள் எழுகின்றன. இதனால் ஒருமித்த அடிப்படையில் குறைந்தபட்ச கட்டணங்களை நிர்ணையித்தல், முறையாக அவை வசூலிக்கப்படுகிறதா என கண்காணித்தல் ஆகியவற்றிற்கு ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டுவர நடுவணரசு திட்டமிட்டுள்ளது. உத்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங் களில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இதுபோன்ற சட்டத்தை பின்பற்றி புதிய விதிகளை உருவாக்க நடுவணரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதன் முலம் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages