மேட்டுப்பாளையம் அருகே தனியார் ஆலையொன்றில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 22 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. - Agnipuratchi

மேட்டுப்பாளையம் அருகே தனியார் ஆலையொன்றில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 22 ஆயிரம் லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

Share This

கோவை மாவட்டம் அன்னூரில் போலி நிறுவனங்கள் பெயரில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான ஆலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பல்வேறு நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த 22 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கலப்பட எண்ணெய் ஆலையை நடத்தி வந்த முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages