கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் இகே.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்வாலோசனைக் கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் த.அசோக்குமார் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து சிறப்புரையாற்றினார்.
இக் கூட்டத்தில், மணவாளநல்லூர் மற்றும் பரவளுர் பகுதிகளில் புதியதாக அமைக்கவுள்ள மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளை தீவிர சிகிச்சை அளிக்காமல் , தீவிர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு தீவிர சிகிச்சையளிக்காமல் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவதை கண்டிப்பது நகர பகுதிகளில் பெண்கள் & பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மது பான கடைகள் இடம் மாற்றம் செய்யக் கோருவது உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ.தனபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர ராஜ்,நகர தலைவர் துரை, குணசேகரன் , நகர அமைப்புச் செயலாளர் P. மேனக் ஷா, துணை அமைப்புச் செயலாளர் நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். நகர ஒருங்கிணைந்த அமைப்புச் செயலாளர் MR.மணிகண்டன் நன்றியுரையாற்றினார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த மாநில துணைப் பொதுச் செயலாளர் த.அசோக்குமார் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் புதியதாக அமையவுள்ள இரண்டாம் அனுமின் நிலைய விரிவாக்கத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளை செய்து கொடுக்காவிட்டால் அனுமதிக்க மாட்டோம் என்றும்,
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஆறுகளையும் சூறையாடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அரசு மணல் குவாரியை எதிர்க்கிறோம் என்றும்,
குறிப்பாக விருத்தாசலம் அருகேயுள்ள மனவாளநல்லூர், புவனகிரி அருகேயுள்ள மெராலூர் பகுதிகளில் மணல் குவாரி அமைக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.இங்கு, மணல் குவாரிகள் ஆரம்பிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் செய்வதற்கான நிலத்தடி நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாகவும் ,
பாட்டாளி மக்கள் கட்சி மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேராராட்டத்தை கையிலெடுக்கும் என்று திட்டவட்டமாக கூறினார்.
No comments:
Post a Comment