கபினி அனையில் இருந்து இரண்டாவது நாளாக 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோரப்பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  - Agnipuratchi

கபினி அனையில் இருந்து இரண்டாவது நாளாக 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோரப்பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Share This

கர்நாடகாவில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால்,  கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 35ஆயிரம் கனஅடி உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இரண்டாவது நாளாக இன்றும் 35ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று மாலை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மைசூரு உள்ளிட்ட மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 31ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 98 அடியாக உயர்ந்துள்ளது. மழை ஓரிரு நாட்கள் நீடித்தால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages