சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கை திரும்பப்பெறும் திட்டமில்லை என டிடிவி.தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். - Agnipuratchi

சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கை திரும்பப்பெறும் திட்டமில்லை என டிடிவி.தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Share This

தகுதிநீக்க விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதுடன், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகவிருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இதனால் டிடிவி.தினகரன் ஆதர வாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்த டிடிவி.தினகரன், தங்க தமிழ்ச்செல்வனின் கருத்தால் அவர் தனது அணியில் இருந்து விலகிவிட்டதாக அர்த்தமில்லை என்றார். தங்க தமிழ்ச்செல்வன் தவிர மற்ற 17 பேரும், சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறும் நிலைப்பாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் தாங்கள் தயார் என அவர் தெரிவித்தார்.

வழக்கை திரும்பப்பெறுவதற்கான மனுவையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவி யிலிருந்து விலகுவதற்கான கடிதத்தையும் சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிப தியிடம் கொடுக்குமாறு தங்க தமிழ்ச்செல்வனை வழக்குரைஞர்கள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் டிடிவி.தினகரன் தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி.தினகரன் என்ற மண்குதிரையை நம்பி 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பயணம் செய்வதாக சாடினார். இப் போதுதான் பிரச்சனை தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages