தர்மபுரியிலிருந்து ஓசூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக ஏழைகளின் வாழ்வாதாரத்தை அரசு பறிக்கத் துடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர். - Agnipuratchi

தர்மபுரியிலிருந்து ஓசூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக ஏழைகளின் வாழ்வாதாரத்தை அரசு பறிக்கத் துடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.

Share This

தர்மபுரியிலிருந்து ஓசூர் வரையில் 4 வழி சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடும் பணி தொடங்கியுள்ளது. 80 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை அமைய உள்ள இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் குடியிருப்புகளும் பறிபோகும் நிலை உள்ளது.  இந்நிலையில் சோகத்தூர், பூசாரிப்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது வாழ்வாதரங்கள் பறிபோவதை நினைத்து குமுறிய அவர்கள், தமிழக அரசை கடுமையாக சாடினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த வீடு பறிபோனதைக் கண்டு பாதிக்கப்பட்டவர்கள் அழுதுபுரண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages