திரிணாமூல் காங்கிரசின் ஆய்வுக் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, மதவெறி, சகிப்பின்மை, மக்களிடையே பாகுபாடு காட்டுவது போன்றவை பாஜகவின் அடையாளங்கள் என கூறினார். பாரதிய ஜனதாவுக்கு ஏற்றார்போல் நடக்காவிட்டால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் எனவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். பாஜகவை போன்று திரிணாமூல் காங்கிரஸ் காவி பயங்கரவாத இயக்கம் கிடையாது என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார்.
மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்வது பாஜகவுக்கு வாடிக்கையாகி விட்டது என்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினர் விழிப்புடன் செயல்படுவது அவசியம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். அதே நேரத்தில் பாஜகவுக்கு துணிச்சல் இருந்தால், சீண்டி பார்க்கட்டும், அப்போது திரிணாமூல் காங்கிரஸ் எத்தகைய கட்சி என்பதை நிரூபிக்கும் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.
No comments:
Post a Comment