கிருஷ்ணகிரி அருகே உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்த்த கிராம மக்களை ஒடுக்க 500க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.  - Agnipuratchi

கிருஷ்ணகிரி அருகே உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்த்த கிராம மக்களை ஒடுக்க 500க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. 

Share This

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் புகலூர் வரை ஆயிரத்து 830 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் கோபுர மின்பாதை அமைக்கும் பணியை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் வண்டிகாரண்கொட்டாய் கிராமத்தில் அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கி யது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை, குடியிருப்புகளை காலிசெய்யக் கோரி மிரட்டல் விடுத்ததால் அவர்கள் தென்னந்தோப்பில் குடியேறி அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென 500க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படையினர், கண்ணீர் புகைக்குண்டு வீசும் இயந்திரம், அவரச ஊர்தி, 10 க்கும் மேற்பட்ட காவல் ஊர்தியுடன் வந்து அணிவகுப்பு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முடிந்தால் திட்டத்தை நிறுத்திப் பாருங்கள் என்று மிரட்டல் விடும் அதிகாரிகள், இரவு நேரங்களில் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில், பூர்வீக நிலத்தை விட்டுத்தரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ள கிராமத்தினர், தங்களின் பிணத்தின் மீது ஏறிச்சென்று தான் மின்கோபுரம் அமைக்க முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages