முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 27 ஆண்டுகளாக சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கக்கோரி, 3 முறை தமிழக அரசு சார்பில் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், சிறையில் உள்ள 7 பேரும் தமிழர்கள் என்பதாலேயே இன்னும் விடுவிக்கப்படவில்லை எனக் கூறினார். ஆனால், தமிழக அரசு நினைத்தால் நடுவண் அரசின் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 16 ஆண்டு சிறை வாசத்திற்குப்பிறகு காங்கிரஸ் ஆட்சியில் விடுவிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினர். ஆனால் கொலை வழக்கில் கைதாகி உள்ளவர்களை மன்னிப்பதாக ராஜிவ்காந்தி குடும்பத்தினரே தெரிவித்தபோதும், அவர்கள் விடுவிக்கப்படாதது தமிழர்கள் என்ற ஒரே காரணம்தான் என நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார்.
No comments:
Post a Comment