தூத்துக்குடி ஸ்டர்லைட் வாகனங்களுக்கு தீவைத்த வழக்கில் 6 பேர் கைது - Agnipuratchi

தூத்துக்குடி ஸ்டர்லைட் வாகனங்களுக்கு தீவைத்த வழக்கில் 6 பேர் கைது

Share This

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, வாகனங்களுக்கு தீவைத்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22ம் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்களை தீவைத்து எரித்தனர். அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்ததோடு 13 பேரின் உயிர் பலியானது. இதனையடுத்து இது தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன. 
ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages