நாடு முழுவதும் அடுத்த 3 மாதங்களில் ஒரு லச்ச வைபை சேவை கொண்டுவரப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து, தொலைத்தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறியுள்ளதவது நாடு முழுவதும் அடுத்த மாதம் 10,000 வை-பை நிறுவன திட்டமிட்டுள்ளோம். முதல் மூன்று மாதங்களில் ஒரு லட்சம் வை-பை வரை நிறுவன இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது வாடிக்கையாளர்கள் பலர் மொபைல் இணைய வசதியையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேநேரத்தில், பொது இடங்களில் திறந்த வை-பை அமைக்கும் திட்டம் அதிக மக்களுக்கு இணைய வசதி கிடைப்பதை சாத்தியமாக்கும். குறிப்பாக, இந்த திட்டத்தால் பெரு நகரங்கள் தவிர, அதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்களில் மக்களுக்கு இணைய வசதி கிடைக்கும். கட்டணத்துடன் வை-பை சேவை வழங்குபவர்களுக்கு உள்கட்டமைப்பாகவும் இது அமையும். மேலும், இந்த திட்டம் 5,00,000 தொழில்முனைவோரை நிச்சயம் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரு லச்சம் வை-பை சேவை திட்டம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment