மக்களின் உயிரை காக்கவே 8 வழிச்சாலை திட்டம்-முதல்வர் - Agnipuratchi

மக்களின் உயிரை காக்கவே 8 வழிச்சாலை திட்டம்-முதல்வர்

Share This

சென்னை-சேலம் 8 வழிச்சாலை முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இது குறித்து கூறியதாவது 8வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும். இதனிடையே நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு பெற்றுத் தரப்படும். சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், திட்டத்திற்கு தமிழக அரசு உதவுகிறது. 8 வழிச்சாலை அமைந்தால் விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு குறையும் என்று தெரிவித்துள்ளார். 
இது குறித்து மேலும் அவர் பேசுகையில் வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக பெருகியிருக்கிறது. வாகனங்கள் பெருகிவிட்டதால் 8 வழிச்சாலை அவசியம், நவீன தொழில் நுட்பத்துடன் சாலை அமைக்கப்பட உள்ளது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages