ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி-சென்னை உயர்நீதிமன்றம் - Agnipuratchi

ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி-சென்னை உயர்நீதிமன்றம்

Share This

லைசென்ஸ் வழங்குவதில் ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க ஆர்டிஓ அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில், நான்கு சக்கர, இலகு ரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு இதுவரை எட்டு (எஸ் வளைவு) போட வேண்டும். ஆனால், இந்த முறையை தற்போது போக்குவரத்து துறை மின்னணு முறையான ‘எச் டிராக்’ என்னும் திட்டத்தை முன்மாதிரி திட்டமாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மின்னணு முறை தொடர்பாக எந்த விளக்கமும் பயிற்சியும் இதுவரை ஆர்டிஓ அலுவலகங்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்குத் தரவில்லை. மேலும், இதனால் பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மனு அள்ளித்திருந்தார். 
இதனை விசாரித்த நீதிமன்றம் புதிய திட்டத்தினை எதிர்க்கக்கூடாது என்றும், சரியான விதிமுறைகள் படி, லைசன்ஸ் கொடுக்கப்பட வேண்டும். லஞ்சங்களை தவிர்க்க ஆர்.டி.ஓ அலுவலகங்களில் 3 மாதங்களுக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages