திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடியவிடிய ஆய்வில் ஈடுபட்ட கையூட்டு ஒழிப்பு துறையினர், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். - Agnipuratchi

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடியவிடிய ஆய்வில் ஈடுபட்ட கையூட்டு ஒழிப்பு துறையினர், கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.

Share This

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கையூட்டு ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் வந்த குழுவினர், திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வருவாய் அலுவலர் ராமலிங்கம், ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்தனர். காலை 6 மணிவரை நீடித்த இந்த ஆய்வில், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரும் இடைத்தரகர்களும் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டனர். விடியவிடிய நடந்த ஆய்வில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages