தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்ட துணை வட்டாட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். - Agnipuratchi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்ட துணை வட்டாட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Share This

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்ட துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறு பகுதிக்கும், மற்றொரு துணை வட்டாட்சியர் சேகர் திருவைகுண்டம் பகுதிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரர்களாக உயர்நீதிமன்றம் சேர்த்த நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடுவணரசு தலையிட முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு நிகழ்வு சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றும் அதனை தமிழக அரசுதான் கவனிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் நிர்மால சீத்தாராமன் கூறினார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages