ஓசூர் அருகே குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் எனக்கருதி வட மாநில இளைஞரை கிராம மக்கள் அடித்துக் கொன்றனர்.
ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர் மீது கிராம மக்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த அவர், அதே இடத்தில் மயங்கி சாய்ந்தார். தகவலறிந்து நிகழவிடத்துக்கு வந்த காவல்துறையினர், வடமாநில இளைஞரை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அந்த நபரின் உயிர் பிரிந்தது. பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட அவரது பெயர், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. குழந்தை கடத்தல் கும்பல் குறித்து சமூக வலைத்தளங்களில் தேவையின்றி பொய் பரப்புரை செய்யப் படுவதால், இத்தகைய மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தற்போது குழந்தை கடத்தல் குறித்த பீதி பரவத் தொடங்கியுள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment