கடலூர் அருகே நூறு மாட்டுவண்டிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து சரக்குந்துகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுகின்றன. இதை தடுக்கக் கோரி கிராம மக்கள் போராடி வரும் நிலையில், அதே பகுதியில் மாட்டு வண்டி களுக்கான மணல் குவாரி அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மணல் அள்ளுவதற்காக வந்த நூறு மாட்டுவண்டி களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எதிர்ப்பை மீறி மணல் குவாரி அமைக்கப்பட்டால், 50 கிராமங்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப் போவதாக அதிகாரிகளிடம் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment