பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என நடுவண் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். - Agnipuratchi

பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என நடுவண் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Share This

குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் தாக் கத்தை தவிர்க்க முடியாது என்றார். பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறையை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப் படுவதை தடுப்பதற்கான தீர்வு குறித்து நடுவண் அரசு ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார். பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்த விவகாரத் தில் மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது என்றார். அதேநேரத்தில், விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தோ, நடுவண் அரசின் வரிகளை குறைப்பது குறித்தோ விளக்கமளிக்க தர்மேந்திர பிரதான் மறுத்துவிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages