தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். - Agnipuratchi

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

Share This

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை மறுஉடற்கூறு ஆய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவர் களையும் சேர்க்க ஆணையிடக் கோரி மூத்த வழக்குரைஞர் சங்கர சுப்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த தலைமை நீதி பதி இந்திரா பானர்ஜி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் உயிரிழந் தது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்தார். குடும்பத்தினர் அனுமதி இல்லா மல் ஒருவரது உடலை எத்தனை நாட்களுக்கு பாதுகாத்து வைப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 

இதனிடையே, துப்பாக்கிச்சூடு குறித்து பொது மக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வரும் ஒருநபர் ஆணையத் தலைவர் அருணா ஜெகதீசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல தூத்துக்குடியில் முகாமிட்டுள்ள தேசிய மனித உரி மைகள் ஆணைய குழுவினர் இன்று 5வது நாளாக பாதிக்கப்பட்டோர் வீடு களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages