எட்டு வழி சாலைத் திட்டத்துக்காக சேலம் அருகே நில அளவீடு செய்ய வந்த வட்டாட்சியருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். - Agnipuratchi

எட்டு வழி சாலைத் திட்டத்துக்காக சேலம் அருகே நில அளவீடு செய்ய வந்த வட்டாட்சியருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Share This

சென்னை-சேலம் பசுமைச்சாலை திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் தமிழக அரசு விடாப்பிடியாக உள்ளது. அதேநேரத்தில் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். சேலம் மாவட்டம்   ஆச்சாங் குட்டப்பட்டியில் நில அளவீடு செய்ய வந்த வட்டாட்சியர் வெங்கடேசனுடன் விவசாயிகளும் பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களுக்கு ஆதரவாக வந்த சமூக ஆர்வலர் வளர்மதியை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

நில உரிமைக்காக அறவழியில் போராடக்கூட அனுமதிக்காத தமிழக அரசுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராம மக்களுக்காக குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் பியூஷ் மனுஷ், வளர்மதி, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரை கைது செய்திருக்கும் காவல்துறையினர், தலைமறைவு குற்றவாளி  எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என்ற கேள்வியும் வலுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages