சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளது-காவல் ஆணையர் விஸ்வநாதன் - Agnipuratchi

சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளது-காவல் ஆணையர் விஸ்வநாதன்

Share This

சென்னையில் இரவு நேரத்தில் செயின் பறிப்பு, திருட்டு,கொலை, இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து காவல்துறையினர் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 8 நாட்களாக அடையார் , மெரினா, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 👀சோதனை நடைபெற்று வருகிறது. இதனை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னையில் நடைபெறும் இந்த ஸ்டார்மிங் ஆபரேசன் இன்னும் ஒரு சில நாட்கள் தொடரும். இது நிரந்தரமாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம், நேற்று முன்தினம் இரவு 7ம் நாள் சோதனையில் 611 பேர் இதுவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages