அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். - Agnipuratchi

அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க செய்வதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Share This

நடுவணரசின் பல்வேறு மருத்துவ திட்டங்களின் பயனாளிகளுடன் அவர் காணொலி மூலம் நேற்று கலந்துரையாடினார். அப்போது, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்குவதற்காகவே, பாரதிய ஜன உஷாதி பரியோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், அங்கு 700 வகையான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 50 முதல் 90 விழுக்காடு வரை மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதேபோல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டணமும் இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கு முன்பாகவே இந்தியாவில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages