மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில், அந்த இயக்கத் தொண்டர்களின் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, மத அடிப்படையில் தேசத்தை வரையறுக்க முடியாது என்றார். சகிப்புத்தன்மை இல்லை என்றால் தேசியவாதமே சீர்குலைந்துவிடும் என எச்சரித்த அவர், ஒரு சிலரை தனிப்படுத்திவிட்டு பன்முகத் தன்மையை கொண்டாட முடியாது என திட்டவட்டமாக கூறினார். சகிப்புத்தன்மைதான் நாட்டின் ஆன்மா என்றும் பிரணாப் முகர்ஜி வர்ணித்தார்.
உடன்படுவதாக இருந்தாலும், மறுத்தாலும் அனைவரது கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்து, இஸ்லாமியம், சீக்கியம் உள்பட பல நம்பிக்கைகளின் சங்கமத்தில் தான் தேசியவாதம் உருப்பெறும் எனவும் பிரணாப் முகர்ஜி கூறினார். அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவாரை தேசத்தின் தவப்புதல்வர் என பிராணாப் முகர்ஜி புகழாரம் சூட்டியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment