ஊழலில் திளைக்கும் பினாமி அரசை அகற்ற கோரி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பாமக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மருத்துவர் ராமதாஸ், ஊழல் புரிவதில் ஓ.பன்னீர் செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்கவே முடியாது என்றார். நடுவணரசின் அடிமைகளாகி மக்கள் விரோத திட்டங்களை இந்த பினாமி அரசு தமிழகத்தில் திணித்து வருவதாகவும் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். சேலம் இரும்பாலையை ஜிண்டால் நிறுவனத்திடம் தாரை வார்த்துவிட்டு கனிம வளங்களை சுரண்டவே பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற முயல்வதா கவும் அவர் புகார் தெரிவித்தார். ஆட்சியில் நீடிக்கும் தகுதியை எடப்பாடி அரசு இழந்துவிட்டதாகவும் மருத்துவர் ராமதாஸ் சாடினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட் டில் 13 பேர் பலியானதை வேதனையோடு குறிப்பிட்ட மருத்துவர் ராமதாஸ், இது போன்ற கொடுமைகளைத் தடுத்து நிறுத்த இந்த ஆட்சியை அகற்ற மக்கள் உறுதியேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். 98 சட்டப் பேரவை உறுப்பி னர்கள் இருந்தும் மக்கள் நலன்காக்கும் வகையில் திமுகவின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக அமையவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார். தமிழகத் தில் உண்மையான காமராசர் ஆட்சி மலர வேண்டுமானால் பாமகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
அன்புமணி ராமதாஸ் நடுவணமைச்சராக இருந்தபோது புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை மருத்துவர் ராமதாஸ் விரிவாக எடுத்துரைத்தார். 21 பேர் உயிர்தியாகம் செய்து நடத்தப்பட்ட சமூக நீதிப் போராட்டம் பற்றி எதுவும் தெரியாத தமிழிசையின் அறியாமையையும் அவர் கடு மையாகச் சாடினார். செப்டம்பர் 17 ஆம் தேதி மாவீரன் குருவின் சிலை நிறுவப்ப டும் என்றும் அவரது கிராமமான காடுவெட்டியில் மணி மண்டபம் அமைப்பதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றும் மருத்துவர் ராமதாஸ் கூறினார். பாமக பொருளாளர் கவிஞர் திலகபாமா, சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா. அருள்மொழி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் பழ. தாமரைக் கண்ணன், அசோக்குமார், மாவட்டச் செயலாளர்கள் சன்.முத்துக் கிருஷ்ணன், ஆறுமுகம், சுரேஷ், முருகன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment