சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் வைப்புத் தொகைகள் கடந்த ஆண்டு 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கருப்புப் பணத்தை ஒழித்து விடுவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் செயல்பாடு அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதாக சாடியுள்ளார். வெளிநாடு களில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கி லும் 15 லட்சம் ரூபாய் இருப்பு வைக்கப் போவதாக கூறிய மோடி அதனை செய் தாரா எனவும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோன்று, மாயாவதி, சீத்தாரம் எச்சூரி உள்ளிட்ட தலைவர்களும் நடுவண் அரசு மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தையும் கருப்புப் பணமாக கருத முடியாது என தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப்பணம் குறித்த விவரங்கள் அடுத்த ஆண்டுக்குள் பெறப்படும் என்றும் கருப்புப்பணம் பதுக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment