தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியில் முதல்போக பாசன பரப்பான 45041 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார். தேனி மாவட்ட வருவாய் அலுவலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் படி, நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கனஅடி தண்ணீரினை இருப்பை பொறுத்து இன்று முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் பேரணை முதல் கள்ளந்திரி வரையுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விவசாயிகள் இது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாசனத்திற்காக வைகை அணை தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment