கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். - Agnipuratchi

கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Share This

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வாழக்கொல்லை அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. ஏற்கனவே இந்தப் பள்ளியில் படித்து வந்த மாணவர்களும் பக்கத்து ஊரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று விட்டதால் வருகைப்பதிவேட்டுடன் ஆசிரியர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கரும்பலகை, கற்பித்தலுக்கான படங்கள் உள்ளிட்டவை இருந்த போதிலும் யாருக்காக இவை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அவலத்துக்கு கல்வித்துறை அதிகாரிகளே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யாமல், மூடுவிழா நடத்த தமிழக அரசு திட்டமிடுவதாக கூறி தமிழகத்தின்  பல இடங்களில் ஆசிரியர்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். தொடக்கக்கல்வியை தமிழக அரசு சீரழிப்பதாக கூறி திருவண்ணாமலையில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில் முதன்மைக்கல்வி அலுலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மதுக்கடைகளை திறக்கத் துடிக்கும் தமிழக அரசு, பள்ளிகளை மூட முயற்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பினர். திருவாரூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்ற போராட்டங்களிலும் அரசுப் பள்ளிகளை மூடும் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages