நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - Agnipuratchi

நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ஆம் தேதி  வெளியிடப்பட்டன. இதில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, நஞ்சு குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதேபோன்று தெலுங்கானாவில் ஜஸ்லின் கவுர் என்ற மாணவியும், டெல்லியில் பர்னாவ் மெஹந்திரட்டா என்ற மாணவனும் உயிரை மாய்த்துக் கொண்டனர். 

இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியாத விரக்தியில் திருச்சியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வில் 94 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்துள்ளார். இதனால் தனது மருத்துவக்கனவு கானல் நீராகிவிடுமோ என்ற அச்சத்தில் சுபஸ்ரீ, இந்த முடிவை எடுத்துள்ளார். தமிழகத்தில் தொடரும் உயிர்ப் பலிகளால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages