கமல்ஹாசனின் நடவடிக்கை ஆர்வக்கோளாறானது மருத்துவர் ராமதாஸ் - Agnipuratchi

கமல்ஹாசனின் நடவடிக்கை ஆர்வக்கோளாறானது மருத்துவர் ராமதாஸ்

Share This

கமல்ஹாசனின் நடவடிக்கை ஆர்வக்கோளாறானது - ராமதாஸ் விமர்சனம்

கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்ததை ஆர்வக்கோளாறில் செய்யப்படும் நடவடிக்கை என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

காவிரி விவகாரம் குறித்தும், அதில் தமிழகத்திற்கான தேவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் கமல்ஹாசன் மற்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், காவிரி பிரச்சினையை இரு மாநில விவசாயிகளுக்கும் பிரச்சனை இல்லாமல் மீண்டும் பேசித்தீர்க்க வேண்டும் என்றும், திரைப்பட விவகாரங்கள் குறித்து கர்நாடக முதல்வருடன் பேசவில்லை. சினிமாவை விட காவிரிதான் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் காவிரி விவகாரத்திற்கு தீர்வு காண முயற்சி செய்யும் கமல்ஹாசனை , பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில் ”கர்நாடக முதலமைச்சரை கமலஹாசன் இன்று சந்தித்து காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்துகிறார். காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நடத்திய காவிரிக்கான தமிழகத்தின் குரல் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages