குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தபால் நிலையம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் 300 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 214 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் மையம் என்கிற நிலையை நிறைவேற்ற உள்ளோம் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கூறுகையில் கிராமப்புற தபால் நிலையங்கள் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து விதமான வங்கி சேவைகளை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதனால் கிராம பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள் என்று தெரிவித்தார்.
அனைத்து தபால் நிலையங்களிலும் விரைவில் வங்கி சேவை-மத்திய மந்திரி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment