சென்னையில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகளை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. - Agnipuratchi

சென்னையில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகளை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Share This

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை சேப்பாக்கத்தில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாநிலையில் ஈடுபட்டனர். எனினும் அவர்களுடன் பேச்சு நடத்தப் போவதில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் உண்ணாநிலையில் ஈடுபட்டிருந்தவர்கள் உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஆட்குறைப்புக்கு வழிசெய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தினர். சென்னையில் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பினர், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி முழக்கமிட்டனர். திருவண்ணாமலையில் நடைபெற்ற போராட்டத்தில் அரசுப்பள்ளிகளை மூடும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் உள்ளிட்ட பல இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages