ராமேஸ்வரத்தில் பஞ்ச கல்யாணி ஆற்றை சுற்றியுள்ள அரியாங்குண்டு, பேக்கரும்பு உள்ளிட்ட 12 கிராமங்களில் இறால் பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மாசடைவதாக கூறி கிராம மக்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காதுகளில் பூச்சுற்றியும், சங்கு ஊதியும் அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனிடையை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனைத்து வகையான விசைப் படகுகளையும் அனுமதிக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
No comments:
Post a Comment